தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பிலான இஸ்லாமிய மாநாடு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும்  இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார அமைப்பான தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு ஒன்று  இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் முன்பாகவுள்ள கடற்கரை முன்றலில் வல்ல அல்லாஹ்வின் உதவியால் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் இஸ்லாமிய மகாநாட்டில் தாருல் அதர் இஸ்லாமிய  பிரச்சாரகர் மௌலவி பி.எம். அஸ்பர் (பாலாஹி) மற்றும் அக்கரைப்பற்று தத்பீகுஷ் ஷரிஆ ஆண்கள் அறபுக்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளரும், பிரபல இஸ்லாமிய சொற்பொளிவாளருமான எஸ்.எம். அப்துல் ஹமீட் (ஷரயீ) ஆகியோர் ‘ரமழானை வரவேற்போம்’ எனும் தலைப்பில் மிகவும் சிறப்பாக  உரை நிகழ்த்தினார்கள்.

இம்மகாநாட்டில் பெரும் திரளான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment