அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டியில் அல் குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 04 மாணவன் முஹம்மட் அனஸ் முஹம்மட் அஸ்ரி ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும், மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் உயர்தரப் பாடசாலை தரம் 05 மாணவி பழுளுல்லாஹ் பாத்திமா பஸ்ஹானா அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி அஸாரின் புதல்வி மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலய மாணவிகளான ஏ.எப்.சமீஹா,எம்.என்.எப்.அஸ்னா ஆகிய இருவரும் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் மாகாண மட்டத்தில்; இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

சிங்கள வரலாற்றுப் போட்டியில் காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எஸ்.எப்.சிப்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மஹ்மூத் பாலிகா உயர்தரப் பாடசாலையின் சேர் ராசிக் பரீட் மாநாட்டு மண்டபத்தில் உயர்தரப் பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (ரஹ்மானி) கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிசாம், விசேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். ஹாஷிம், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஷேகு அலி, கல்முனை மஹ்மூத் பாலிகா உயர்தரப் பாடசாலையின் ஆசிரியர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளரகள், பிரமுகர்கள், புத்திஜீவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் பரிசளிப்புநிகழ்வில் கிண்ணியா, மூதூர், திருகோணமலை, கந்தளாய், ஏறாவூர், வாழைச்சேனை, சம்மாந்துரை, அக்கரைப்பற்று, கல்முனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவிலான மாண மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment