ரமளானை முன்னிட்டு விசேட தேவையுடைய(வலது குறைந்தோர்)மாணவர்களுக்கு இலவச ஆடைகள் வழங்கி வைப்பு

– பழுளுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????காத்தான்குடி: புனித ரமளான் மாதத்தை முன்னிட்டு கிழக்கிலங்கையில்  கிழக்கிலங்கை இஸ்லாமிய அங்கவீனர் நலன்புரி அமைப்பினால்காத்தான்குடியில் இயங்கிவரும் ஸாஹிறா விசேட தேவையுடையோர்(வலது குறைந்தோர்)பாடசாலை மாணவர்களுக்கு இலவச ஆடைகள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஸாஹிறா விசேட தேவையுடையோர்(வலது குறைந்தோர்)பாடசாலையில் பாடசாலையின் தலைவர் எஸ்.எச்.பஷீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ,சிரேஷ்ட ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா போரத் தலைவருமான எம்.எம்.முஸ்தபா (பலாஹி), கிழக்கு மண் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான், மௌலவி பஷீர் (மதனி) உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவசமாக ஆடைகளை வழங்கி வைத்தனர்.

இதன்போது 49 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இலவசமாக ஆடைகள் வழங்கப்பட்டன.

பல ஆண்டு காலமாக இயங்கி வரும் ஸாஹிறா விசேட தேவையுடையோர்(வலது குறைந்தோர்)பாடசாலையில் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment