திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மானமும், கிராமிய மின்சாரம், நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் குச்சவெளி, மூதூர், தம்பலகாமம் போன்ற கிராமங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அப்பிரதேசத்தில் வாழும் ஏழைகழுக்கான வீட்டு மின்சார இணைப்பற்றவர்களுக்கு சூரிய ஒளியின் மூலம் மின்னைப்பெறும் உபகரணங்கள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்டுள்ளது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர், மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




Leave a comment