சஹீட் அப்ரிடி பாகிஸ்தான் அணியில் மீண்டும் தெரிவு

afridiMJ

லாஹூர்: இங்கிலாந்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இடம்பிடிக்கத்தவறிய முன்னாள் பாகிஸ்தான் அணியின் தலைவரும் சகல துறை ஆட்டக்காரருமான சஹீட் அப்ரிடி, பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடிய ஷாஹித் அப்ரிடிக்கு இந்த வாய்ப்பு  கிடைத்துள்ளது. அதேசமயம், சுஹைப் மலிக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அப்ரியுடன் உமர் அக்மல், அகமது சாஷாத் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இரு தரப்பு ஒரு நாள் தொடருக்கான அணியில் அப்ரிடி மீண்டும் இடம் பிடித்துள்ளார். அணியில் இடம் பிடித்துள்ள மற்றவர்கள் விக்கெட் காப்பாளர் ரிஸ்வான் அகமட், ஹரிஸ் சொஹைல், சுல்பிகர் பாபர் ஆகியோர் ஆவர்.

முன்னாள் தலைவரான சுஹைப் மலிக், சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ்  போட்டியில் மோசமாக விளையாடியதால் நீக்கப்பட்டுள்ளார். அத்தொடரில் அவர் மொத்தமே 25 ஓட்டங்ளே பெற்றிருந்தார். அதேபோல விக்கெட் காப்பாளர் கம்ரான் அக்மல், தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பர்ஹத் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

Shahid-afridi-001[1]

1980 மார்ச் முதலாம் திகதி பிறந்த அப்ரிடி ‘பூம்-பூம்’, ‘லா-லா’ என செல்லமாக கிரிக்கட் இரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மைதானத்துக்குள் அவர் நுழையும் போது, இரசிகர்கள் வழங்கும் ஆராவாரங்களில் துரிதமாக தன்னை மெய் மறப்பதால் அதிகமான போட்டிகளில் வந்த வேகத்திலேயே மைதானத்தைவிட்டு வெளியேறும் நிலை அப்ரிடியில் காணப்படுவதன் காரணமாக இவர் பாகிஸ்தான் கிரிக்கட் சபையால் விமர்சிக்கப்பட்டிருந்தார்.

அப்ரிடிக்கு பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 6 மாதமாக அணியில் இடம் பிடிக்க போராடி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment