கல்வியை ஒரு போதும் விலை பேசி விற்று விட வேண்டாம்: கி.மா.சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர்

7141_476337215777339_1987123821_n– எம்.நவாஸ்
ஏறாவுர்; கல்வியை ஒரு போதும் விலை பேசி விற்று விட வேண்டாம். எமது நாளைய தலைமுறையினருக்காக அதனை பரிசளியுங்கள் கி.மா.சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம். சுபைர்.BA-JP தெரிவித்துள்ளார்.கிழக்கு பிராந்திய E-SOFT (இ-சொப்ட்) நிறுவனத்தில் கணனிக்கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த சுமார் 600 இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயக மண்டபத்தில்  இடம்பெற்றது.
E-SOFT (இ-சொப்ட்) நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ரீ. சசிகுமார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின்
பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம். சுபைர், மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஜ்.எம்.சாள்ஸ், E-SOFT (இ-சொப்ட்) நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தயான் ராஜபக்ஸ உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், 30 வருட யுத்தம் எமது நாட்டை, குறிப்பாக கிழக்கு மாகாணத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
விஷேடமாக, மட்டக்களப்பு வாழ் மக்களாகிய எமது மக்கள் உறவுகளை, உடைமைகளை, பொருளாதாரத்தை இழந்து பல கஸ்டங்களையும் துன்பங்களையும் எதிர் நோக்கி வந்தனர்.
அன்று நாம் இழந்த சொத்துக்களை மீளப்பெற வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழியாக “கல்வி” என்ற ஆயுதம் தான். அக்கல்வியினால் தான் நாம் எமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் அவர் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் கணனி அறிவினையும், வர்த்தக, விஞ்ஞானம் போன்ற உயர் கல்வியினையும் பெற பல மைல் தூரம் கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது. பெண் பிள்ளையாக இருந்தால் அப்பிள்ளையின் பாதுகாப்பு பற்றிச் சிந்திக்க வேண்டியும் இருந்தது.
ஆனால் இன்று அந்நிலை மாறி எமது காலடியிலேயே கல்வியைப் பெற எமக்கு பல வழிகள் கிடைத்துள்ளன.
அரசாங்கம் கல்வியில் பாரிய மாற்றத்தையும் முன்னேற்றங்களையும் கொண்டு வந்திருக்கின்ற வேளையில், அதற்கு ஏற்றாற் போல தனியார் கல்வி நிறுவனங்களும் தமது கொடியினை பறக்க விடுகின்றது.
அதிலும் கல்வியை காசுக்காக விற்று உழைக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் இருக்கின்ற வேளையில்,E-SOFT (இ-சொப்ட்) நிறுவனம் இலங்கையில் தரம் வாய்ந்த கல்விச் சேவையினை வழங்கி வருகின்றது. அதன் பிரதிபலிப்புத் தான் இன்று 600 மாணவர்கள் இக்கிழக்கு பிராந்தியத்தில் அதன் அடைவு மட்டத்தை எட்டியுள்ளனர்.
எனவே தான், கல்வியை வியாபார நோக்காக கொண்டு கல்வி நிலையங்களை நடாத்தும் நிறுவனங்களிடம் நான் அன்பாகவும் எச்சரிகையாகவும் வேண்டிக்கொள்வது, தயவு செய்து கல்வியை ஒரு போதும் விலை பேசி விற்று விட வேண்டாம். எமது நாளைய தலைமுறையினருக்காக அதனை பரிசளியுங்கள்.
அதன் மூலம் எமது மாவட்டத்திலும் மாகாணத்திலும் சிறந்த கல்வியாளர்களை உருவாக்கி தேசியத்திற்கு பாடம் சொல்லி கொடுக்கின்றவர்களாக அவர்களை மாற்றி நல்ல மாற்றத்தினை கொண்டு வர நாம் ஒவ்வொரும் பொறுப்புடன் கடமையாற்றுவோமாக என தமது உரையின் போது பிரதித் தவிசாளர் குறிப்பிட்டார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment