-டீன் பைரூஸ்-
காத்தான்குடி;காத்தான்குடி தப்லீக் மா்கஸில் இயங்கி வரும் (SRIRC) Sabeelur Rasath Islamic Religious College. ஸபீலுா் றஸாத் இஸ்லாமிய மார்க்கக் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவும் கத்முல் புஹாரியும் (04.07.2013 வியாழன்) காலை 06.00 மணிக்கு நடை பெறவுள்ளது.
அல் குர்ஆன் மற்றும் ஹிதாபு பிரிவு என இரு பிரிவுகளைக் கொண்டு இயங்கும் மேற்படி மார்க்கக் கல்லுாரியில் அஷ்ஷெய்ஹ்-அல் ஹாஜ் ஏ.எம்.ஹாறுான் (றஸாதீ) அவா்கள் அதிபராகவும் சுமார் 15 உஸ்தாது மார்களுடன் 70 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லுாரியில் தங்கி மார்க்கக் கல்வி பயின்று வருகின்றனர்.
மேற்படி கல்லுாரியின் முதலாவது பிரிவில் 9 மாணவா்கள் “ றஸாதீ ” என்ற பட்டத்தினைப் பெற்று வெளியேறுவதுடன் இவா்கள் தங்களது இறுதியாண்டில் “ அஸ்ஸிஹாஹூஸ்ஸித்தா ” எனப்படும் ஆறு கிரந்தங்களையும் (இருபத்தி ஒன்பது ஆயிரம் ஹதீஸ்களையும்) விளக்கங்களுடன் மிக திறமையாகக் கற்று வெளியேறுகின்றனா்.
இன்ஸா அல்லாஹ் நாளை நடை பெறவுள்ள மேற்படி நிகழ்வுக்கு உள்ளுா்,வெளியுா்களிலிருந்து பிரபல மார்க்க அறிஞா்கள் பலர் கலந்து கொள்ள இருப்பதுடன் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்க்கூன்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Leave a comment