பனங்கைப்பணி மாதிரிக்கிராமம் தொடர்பான தொழில் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த 195 பேருக்கு சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் -அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு

DSC07359பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: பனை வளம் எமது வாழ்வையும் தேசத்தையும் வளப்படுத்தும் எனும் தொனிப்பொருளில் பனை அபிவிருத்தி சபை மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் தாளங்குடா பனங்கைப்பணி மாதிரிக்கிராமம் தொடர்பான தொழில் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த 195 பேருக்கு சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 02-07-2013  செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தனம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்கஸ் தேவானந்தாவும்,கௌரவ அதிதிகளாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்த அமைச்சின் தேசிய இணைப்பாளர் கே.தங்கேஸ்வரி மற்றும் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரதரன் உடப்ட பலரும் பிரச்னமாயிருந்தனர்.

இதன் போது தொழில் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

This slideshow requires JavaScript.

இங்கு மட்டு – தாழங்குடா பனங் கைப்பணி மாதிரிக் கிராமத்தில் பனம் பொருள் தொழில் பயிற்சியை முடித்தவர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பனம் பொருள் உற்பத்திப்பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment