காலி ஹிரிம்புற கல்வி மற்றும் திறன் அபிவிருத்திச் சங்கத்தினால் இன நல்லுறவைப் பேணும் இரத்ததான முகாம்

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

காலி: தென்மாகாணத்தில் காலி ஹிரிம்புற கல்வி மற்றும் திறன் அபிவிருத்திச் சங்கத்தினால் (HEADS) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இண நல்லுறவைப் பேணும் இரத்ததான முகாம் அண்மையில் காலி ஹிரிம்புற ஸுலைமானியா நவோதயப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இன, மத வேறுபாடின்றி மக்கள் கலந்து கொண்ட இவ் இரத்ததான நிகழ்வில் காலி ஹிரிம்புற கல்வி மற்றும் திறன் அபிவிருத்திச் சங்க செயலாளர் றிசாத் உபைல், சங்க உறுப்பினர்கள், பெண்கள் பிரிவு அங்கத்தவர்கள், மதகுருமார்கள், செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள், ஊர்மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த காலி ஹிரிம்புற கல்வி மற்றும் திறன் அபிவிருத்திச் சங்கம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையைப் பேணும் இன நல்லுறவு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment