இலங்கை தேசிய கல்விக் கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் கணித விஞ்ஞான மன்றத்தின் வெளியீடான – ஈர்ப்பு -புலம் தொகுதி-04 சஞ்சிகை வெளியீடு விழா

Yourkattankudy
Yourkattankudy

பழுலுல்லாஹ் பர்ஹான்

தாளங்குடா: இலங்கை தேசிய கல்விக் கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் கணித விஞ்ஞான மன்றத்தின் வெளியீடான ஈர்ப்பு – புலம் தொகுதி – 04 சஞ்சிகை வெளியீடு விழா செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஈர்ப்பு -புலம் தொகுதி-04 சஞ்சிகையின் முதற் பிரதியை மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் திருமதி தர்சினி சுந்தர்லிங்கம் நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதீ சி.பாக்கியராசாவுக்கு வழங்கி வைத்தார்.

இவ் சஞ்சிகை வெளியீடு விழாவில் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரி உப பீடாதிபதிகள் ,விரிவுரையாளகள், கல்விக் கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு ஈர்ப்பு – புலம் தொகுதி -04 சஞ்சிகையின் ஆய்வுரையை திறந்த பல்கலைக் கழக விரிவுரையாளர் க. ஞானரெத்தினம் வழங்கினார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment