கொழும்பு: பிரிட்டனுக்கு உல்லாசப் பயண விசாவில் செல்ல மூவாயிரம் ஸ்ரேலிங் பவுண்களை பிணை முறியாகச் செலுத்த வேண்டுமெனும் அந்நாட்டு அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை ஆட்சேபித்துள்ளது. இந்நடைமுறை காரணமாக மேற்படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிரிட்டன் செல்வோர் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம இவ்விவகாரம் தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனையை பிரிட்டனுக்கு தெரியப்படுத்தியிருப்பதாக கூறினார்.
மேலும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் இந்நடைமுறையை உடனடியாக ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கு மாறு கோரியிருப்பதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
பிரிட்டிஸ் அரசாங்கம் இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு பிணை முறி செலுத்த வேண்டிய நடைமுறை யினை அறிமுகப் படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன்
Leave a comment