கோப் ரெஸ்ட் இன் விடுதி பாசிக்குடாவில் ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரகாந்தனினால் திறந்து வைக்கப்பட்டது

– பழுலுல்லாஹ் பர்ஹான்

DSC_0210மட்டக்களப்பு: கோறளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட கோப் ரெஸ்ட் இன் விடுதி திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கோப் ரெஸ்ட் இன் விடுதியானது கடந்த 29.06.2013) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 3 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி ரெஸ்ட் இன் ஆனது சகல வசதிகளுடனான நவீன முறையிலான குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரண அறைகள் சாதாரண விலைகளில் கிடைக்கின்றன.

இந் நிகழ்வில் கோறளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பஞ்சலிங்கம், பொது முகாமையாளர் நாகராஜா, இயக்குணர் சபை உறுப்பினர்கள் மறறும் ப.நோ.கூ.சங்கத்தின் தலைமைக் காரியாலய உத்தியேகஸ்த்தர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

DSC_0210

Published by

Leave a comment