கொழும்பு: நடை பெறவுள்ள வடமாகாண சபை, வடமேல் மாகாண சபை, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோறப்படுகின்றன.
இவ்வாறு வேட்பாளர்களாக போட்டியிடவிரும்புபவர்கள் தாம் போட்டியிடவிரும்பும் மாவட்டம் உள்ளிட்ட முழுமையான சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தினை எதிர்வரும் 08 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் பதிவுத் தபாலில்
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
21,
சுஜாதா மாவத்தை,
களுபோவில
என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், ஈமெயிலில் அனுப்ப விரும்புபவர்கள்
acmcaa11@gmail.com முகவரிக்கு அனுப்புமாறும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கேட்டுள்ளார். மேலதிக விபரங்களுக்கு 0777315329 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
Leave a comment