மட்டக்களப்பு: மாகாண மட்டத்தில் வெற்றிக்கிண்ணத்தினைப் பெற்று சாதனை புரிந்த மட்-கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக் கழக மகளீர் உதைப்பந்தாட்ட அணியினரை ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் நேற்று (30.06.2013) நேரில் சென்று வாழ்த்து செய்தி வழங்கினார்.
மட்-கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக் கழக மகளீர் உதைப்பந்தாட்ட அணினர் மாகாண மட்டத்தில் வெற்றி கிண்ணத்தினை பெற்று எதிர்வரும் 04.07.2013 ஆம் திகதி தேசிய ரீதியில் விளையாடுவதற்காக தமது பயணத்தினை மேற்கொள்ள உள்ளனர்.
இவ் வீராங்கணைகளுக்கு வாழ்த்து செய்தி வழங்குவதங்காக ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்திச் செய்திகளை வழங்கினர்.



Leave a comment