பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மட்டக்களப்பு ஆரையம்பதி பாலமுனை தேசிய விளையாட்டு கழகத்தின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு இரண்டு விளையாட்டு கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகத்திற்கும் மஞ்சந்தொடுவாய் சவுண்டர் விளையாட்டு கழகத்திற்கும் இடையிலான இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரையம்பதி பாலமுனை தேசிய விளையாட்டு மைதானத்தில் பாலமுனை தேசிய விளையாட்டு கழகத்தின் தலைவர் எம். லாபிர் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மஞ்சந்தொடுவாய் சவுண்டர் விளையாட்டு கழகத்தைவிட 04-0 எனும் கோல் கணக்கில் காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கிகொண்டது. இந்நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. எல். எம். பரீட், முன்னால் ஸ்ரீ .ல. மு. கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என். கே. றம்ழான், சவுண்டர் விளையாட்டு கழகமத்தின் தலைவர் ஏ.சி.எம்.லத்திப் ஜே.பி மற்றும் ஊர் பிரமுகர்கள், அரசியல் வாதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன் போது முதலாவது இடத்தை பெற்ற காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகத்திற்கான வெற்றிக் கிண்ணத்தை முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் அதன் அணித்தலைவர் ஏ. பி. நஜீமிடம் வழங்கி வைத்தார் இரண்டாவது இடத்தை பெற்ற சவுண்டர் விளையாட்டு கழகத்திற்கான வெற்றிக் கிண்ணத்தை முன்னால் ஸ்ரீ. ல. மு. கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் அதன் அணித் தலைவர் எம். ஐ. எம். ஷமீரிடம் வழங்கி வைத்தார்.

Leave a comment