நாவலடி அந்நூர் பள்ளிவாயல் இனந்தெரியாதோரால் உடைப்பு

masjidமட்டக்களப்பு: மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி கிராமத்தில் மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாயல் ஞாயிறு இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இரவு நேரத் தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசல் மூடப்பட்டுவிட்டது.

அதிகாலை தொழுகைக்காக காலை 4 மணியளவில் பள்ளிவாசலில் கடமை செய்பவர், அங்கு சென்றபோது பள்ளிவாயல் உடைந்து காணப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பள்ளிவாசலில் உள்ளே இருக்கும் ண்டியலும் வெளியில் இருக்கும் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அலுமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்களை வெளியே வீசியுள்ளனர் என்று இப்பள்ளிவாசலில் கடமை புரியும் மௌலவி எச்.எம்.இர்பான் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

masjid

masjid (2)

Published by

Leave a comment