ஜனாதிபதியின்ஆலோசகர் சி.சந்திரகாந்தனின் நிதி ஓதுக்கீட்டில் பட்டிப்பளை பிரதேச முனைக்காடு கிராமம் அபிவிருத்தி

image– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஜனாதிபதியின்ஆலோசகரும் கிழக்க மாகாண உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் நிதி ஓதுக்கீட்டில் பட்டிப்பளை பிரதேச முனைக்காட்டுக் கிராமம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் நிதி ஓதுக்கீட்டில் பட்டிப்பளை பிரதேசத்தில்  முனைக்காடு  கிராமத்தினை அபிவிருத்தி செய்வதற்கான. ஆரம்பக்கட்ட ஓன்றுகூடல் மட்/ விவேகானந்தா வித்தியாலயத்தில் நேற்று (30.06.2013) சி.சந்திரகாந்தனின்;  தலைமையில் இடம்பெற்றது.

இதில் முன்னால் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், பிரதேச தொழிநூட்ப உத்தியோகஸ்தர், மற்றும் முனைக்காடு கிராமத்தின் நான்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்திச்சங்களின் தலைவர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவிகள், ஆலயங்களின் தலைவர்கள் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இங்கு கிராமத்தின் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பயனாளிகளான  கிராம மக்களின்  கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்குமிடத்து அவர்களின் தேவைகளை அறிந்து உரியமுறையில் அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் என்பதற்காகவே இவ் ஒன்று கூடல் இன்று இடம் பெற்றது.

அதற்கமைய மக்களின் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு அவிபிருத்திக்கான ஒன்றுகூடல் சிறந்த முறையில் நிறைவு பெற்றது.
image

image-3

image-5

Published by

Leave a comment