சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம், முஸ்லிம் டாக்டர்களை நிராகரியுங்கள்: பொதுபல சேனா

bothuகொழும்பு: நாட்டின் அடுத்த சவால், இளம் தலைமுறையினரிடையே கருத்தடை மாத்திரைகள் பிரபலமாகி வருகின்றன. இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதை சிங்கள மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எனவே சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் முஸ்லிம் வர்த்தகத்தை பகிஷ்கரிக்குமாறும் முஸ்லிம் மருத்துவர்களை நிராகரிக்குமாறும் ஞானசார தேரர் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

– வீரகேசரி

Published by

Leave a comment