உள்ளுராட்சி மாகாண சபையினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரம் பாவனைக்காக நகரபிதா ஹில்மி கையளிக்கப்பட்டது

DSC05706– ரைஸ்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான உழவு இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு  அண்மையில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வருகை தந்திருந்த உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உழவு இயந்திரங்களை கையளித்தார். கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் உழவு இயந்திரத்தை பெற்றுக் கொண்டார்.

உள்ளுராட்சி மாகாண சபைகளின் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்விடம் கிண்ணியா பிரதேச சுற்றாடல் மற்றும் கழிவகற்றலுக்கு அத்தியவசியமாக உள்ள தேவைகள் சம்பந்தமாக நகரபிதா ஹில்மி மேற்கொண்ட தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் காரணமாக குறித்த இயந்திரம் கிண்ணியா நகரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட உழவு இயந்திரத்தினை பாவணைக்காக கையளிக்கும் நிகழ்வு  நகரபிதா தலைமையில் நேற்று நகரசபை வளாகத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா நகரசபையில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எச்.எம்.இன்சாபிடம் குறித்த உழவு இயந்திரம் கையளிக்கப்பட்டது. இதன் போது நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத் நகரசபை உத்தயோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
DSC05706

DSC05707

Published by

Leave a comment