அமைச்சர் பசீர் சேகுதாவூதின் திடீர் அரசியல் மாற்றம்

BASHEER[1]கொழும்பு: ‘அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டன. இந்த நிலையில்தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இது பொருத்தமான காலமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அரசு உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும்’ என அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடக் கூட்டம் சனிக்கிழமை மாலை கட்சியின் தலைமையக மான தாறுஸ்ஸலாமில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பசீர், ‘விஷேடமாக அரசாங்கத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலுள்ள உறவு தொடர்பாக உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டார்.

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்தால் உறுதியாக அரசாங்கத்தோடு இருக்க முடியாது. அரசாங்கத்தோடு இருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உறுதியா இருக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸுடனும் அரசாங்கத்தோடும் ஒன்றாக இருந்தால் அரசின் பங்காளிக்கட்சி என்ற அடிப்படையில் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்ற முடியாது இது தான் நான் கண்ட அனுபவமாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘எதிரே மூன்று மாகாணசபை தேர்தல்கள் நடைபெறப் போகின்றன. விஷேடமாக வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதென்றால் அரசிலிருந்து வெளியேறி விட்டு தனித்து போட்டியிடுவதே இன்றைய காலத்துக்கு பொருத்தமானதாகும். இவ்வாறில்லாமல் அரசுக்குள் இருந்து கொண்டு தனித்து போட்டியிட்டால் அரசுக்கு குழி பறிக்கும் ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசு பார்க்கும்.

இதனால், அரசுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் உள்ள இடைவெளி இன்னும் அகலமும் ஆழமுமாகிவிடும். இதனால் கட்சிக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஆபத்துக்கள் ஏற்படாலம் என்ற அச்சமும் எனக்குள் இருக்கின்றது. இது என்னுடைய அரசியல் பார்வையாகும். எல்லோரும் அரசாங்கத்திருந்து வெளியேறுவோம் என்றால் நானும் வெளியேறுவதற்கு தயாரக இருக்கின்றேன்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘கடந்த வருடம் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்ற போது நான் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தேன். இந்த இராஜினாமாவையும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவே செய்ததாக பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதற்கு ஏதுவாக அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகமொன்றுக்கு வெளிட்டிருந்த கருத்தையும் ஆதரமாக கொண்டு பயண் படுத்தியிருந்தனர்.

இன்று அமைச்சரவை அந்தஸ்;துள்ள அமைச்சுப்பதவி எனக்கு வழங்கப்பட்ட போது கட்சிக்குள் அரசின் ஆளாக செயற்படுவதாக பொய்யான பிரசாரம் செய்து எனது கடந்த கால அரசியல் வராலற்றஇயும் அரசியல் வாழ்வையும் கலங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்து எனது அரசியலின் யதார்த்தத்தின் பூர்வீக தன்மையை தீவிரப்படுத்தி நான் மேலே சொன்ன முஸ்லிம் காங்கிரசில் இருந்தால் அரசாங்கத்தோடு இருக்க முடியாது.

அரசாங்கத்தோடு இருந்தால் முஸ்லிம் காங்கிரஸில் இருக்க முடியாது. அரசிலும் முஸ்லிம் காங்கிரஸிலும் இருந்தால் முஸ்லிம் மக்களின் தேவைகள் எதையும் செய்யமுடியாது. இது தான் நான் கண்ட அனுபவமாகும்’ என்றார்.

‘வட மாகாண சபை தேர்தலை மாத்திரம் கொண்டு நான் இதை பேசவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு பேசுகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கமும் ஒன்றாக இருந்தாலும் கூட முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரஸே எடுக்க வேண்டுமே தவிர அரசு இத்தீர்மானத்தை எடுக்க முடியாது.

ஏனென்றால் அரசு இது தொடர்பாக எடுக்கம் தீர்மானம் முஸ்லிம் காங்கிரசை துரத்துகின்ற அடிப்டையில் அமையும் இருக்கும். இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் அதன் போராளிகளினதும் தலைமைத்துவத்தினதும் தன்மானத்திற்கும் கௌரவத்திற்கும் கேடான விடயமாகும்’ என அவர் இங்கு மேலும் தெரிவித்தார். JPC

Published by

Leave a comment