கிரான்குளம்: மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் என். டீ. பீ. விடுதியில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30மணியளவில் கிரான்குளம் என். டீ. பீ. விடுதியில் வைத்து தாய், தந்தை, இரு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யதுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுத்திப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முற்பட்ட 23பேர் பொலிஸாரினாலும் இரானுவத்தினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment