க.பொ.த. உயர்தரப் பரீட்சை: ஜூலை 30 – ஓகஸ்ட் 31வரை ரியூசன் வகுப்புக்களுக்குத் தடை

Examகொழும்பு: க. பொ. த. உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளமையை முன்னிட்டு சகல டியூஷன் வகுப்புகளும் கருத்தரங்குகளும் ஜூலை 30ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மாலை வரை நடத்துவது தடை என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை க. பொ. த. உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டே உயர்தரத்துக்குரிய சகல டியூஷன் வகுப்புகள், மீட்டல் வகுப்புகள் கருத்தரங்குகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உத் தரவிட்டிருந்தார்.

இதற்கமையவே இது அமுல்படுத்து வதாகவும், பொலிஸ் மா அதிபர் ஊடாக சகல பிரிவுகளிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுக்கப் பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

தடையை மீறி டியூஷன் வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துபவர்களுக்கு எதிராக பரீட்சைகள் சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோன்று ஆகஸ்ட் 25 ஆம் திகதி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் 25 ஆம் திகதி மாலை வரை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஏதுவான டியூஷன் வகுப்புகள், மீட்டல் வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்துவதும் தடைசெய்யப்படுகிறது.

அத்துடன் இம்முறை க. பொ. த. உயர்தர பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் யாவும் ஜுலை 2 ஆம் திகதியே அதாவது நாளை மறுதினம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரேயே கிடைக்கக் கூடியதாக அனுப்பிவைக்கப்படுகிறது.

எனவே அனுமதி அட்டைகள் கிடைத்தவுடன் உடனடியாக தாமதிக்காமல் மாணவர்களிடம் கையளிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார அதிபர்களிடம் கேட்டுக்கொள்கிறார்.

ஏனெனில் அனுமதி அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கு இது ஏதுவாக அமையும் என்றும் அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்வதற்கு ஜுலை 27 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட் டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

– கொழும்பு

Published by

Leave a comment