காத்தான்குடி: “நபி (ஸல்) அவா்களின் தலை முடியினை பார்ப்பது, பாதுகாத்து வைப்பது பரக்கதாகும். ஆகவே அவ்வாறான முடி எங்கிருந்தாலும் அதனை அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்” என்பதாக மௌலவி அல் ஹாஜ். ஏ. ஜெ. அப்துர் றவூப் (மிஸ்பாஹி) வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார்.
காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் ஹாஜா நாயகத்தின் கந்துாரி, பயான் நிகழ்வுகள் மற்றும் தபர்றுக் வினியோகமும் நடைபெற்று வந்தன. இதன் போது உரையாற்றிய மௌலவி அப்துர் றவூப் (மிஸ்பாஹி), “மாநபி (ஸல்) அவா்களை மிகவும் நேசிக்கின்ற ஒரு கூட்டம் உலகம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்” .
“நபியை மட்டுமல்ல நபியின் முடியைக் கூட வருடத்தில் ஒரு முறையாவது பார்த்து அதன் பரக்கத்தை அடைய வேண்டும் என்ற பேராவலுடன் அலைகின்றார்கள். நபி(ஸல்) அவா்களின் தலை முடியினை தொட்டுப்பார்ப்பது, அதனை பாதுகாத்து வைப்பது, தர்சிப்பது பரக்கத்தை அளிக்கக் கூடிய விடயமாகும்”.
“சவுதி அரேபியா, இந்தியா, இலங்கை உட்பட இன்னும் பல நாடுகளில் நபி (ஸல்) அவா்களின் ஒரு சில தலை முடிகளை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள். இவை போன்று நாமும் நபியின் முடியினை இங்கு கொண்டு வர வேண்டும். இதனை செய்ய மூன்று போ் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுள், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சேர், மற்றவா் சேகுதாவூத் பஷீர் ( இவா் ஒரு தரீக்காவாதி) அடுத்தவர் அமைச்சர் அதாவுல்லா. எனவே இவா்கள் முயற்சி எடுக்க வேண்டும் ‘ என வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார்.


Leave a comment