– விசேட நிருபர்
காத்தான்குடி: புதிய காத்தான்குடி அஸ் ஸஹ்றா, ஹெப்பி ஹிட்ஸ், ஹிஸ்புல்லாஹ் பாலா் பாடசாலைகளின் விளையாட்டு விழா இன்று (29.06.2013 சனி) காத்தான்குடி மத்திய கல்லுாரி தேசிய பாசாலை மைதானத்தினில் எம். எல். அப்துல் அஸீஸ் JP – GSO தலைமையில் நடை பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிதம அதிதியாக முன்னால் நகர சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினருமான கௌரவ அல் ஹாஜ் எம். எம். அப்துர் ரஹ்மான் Eng கலந்து கொண்டு சிறப்பித்தார். சுமார் 85 க்கும் மேற்பட்ட மாணவா்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இன் நிகழ்வுக்கு முழுமையான அனுசரனையினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வுக்கு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா அமீர் எஸ். எச். எம். பிர்தௌஸ் (நளீமீ), ஏ. ஜீ. எம். ஹாறுான், எஸ். எம். எம். காஸீம், மர்சூக் அஹமட் லெப்பை JP(முன்னால் நகர சபை தவிசாளர்), இல்மி அஹமட் லெப்பை JP, சமுர்த்தி முகாமையாளர் எம். ஏ. எம். சுல்மி JP, அஷ் ஷெய்ஹ் எம். எச். எம். ஜிப்ரி (மதனி) உட்பட பெருந்திரலான பொற்றோர்களும் கலந்து கொண்டனர்.





Leave a comment