டீன் பைரூஸ் –
காத்தான்குடி: சுமார் எழுபது (70 இலட்சம்) ரூபா செலவில் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம் அமைப்பதற்காக வேண்டி அடிக்கல் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வினால் இன்று (28.06.2013 வெள்ளி) நடப்பட்டது.
மில்லத் மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் .BA-PGDE அவா்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் MA-MP பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏம். அஹமட் லெப்பை SLEAS, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முஹம்மது பாறூக் சிப்லி Eng ,பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். சுபைர் BA-SLPS-1, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாசபைத் தலைவர் எஸ்.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் JP, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் JP உட்பட ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரிய,ஆசிரியைகள், மாணவா்கள், பாடசாலையின் அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள் (SDC) பலரும் கலந்துகொண்டனர்.
Leave a reply to Mr-avathaani Cancel reply