1814ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 199வது ஆண்டு கல்லூரி தின நிகழ்வுகள்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

BATTICALOAமட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் மெதடிஸ்த திருச்சபையினால்1814ம் ஆண்டு  உருவாக்கப்பட்ட பெருமைமிக்க மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 199வது கல்லூரி தின நிகழ்வு  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை தேவாலய மண்டபத்தில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இ.கமலராஜா தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

வணக்க வழிபாடுகளுடன் ஆரம்பமான இவ் வைபவத்தில் கல்லூரியின் வரலாறு அதன் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றி கல்லூரி அதிபரினால் உரைநிகழ்த்தப்பட்டதுன் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை போதகர் டெரன்ஸ் வழிபாட்டு போதனையை  நிகழ்த்தினார்.

 அத்தோடு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை தேவாலயத்தில் இருந்து நடைபாதையாக சென்ற அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்  கிழக்கு மாகாணத்தில் கல்வியின் முன்னோடியாக விளங்கிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஸ்தாபகரும், வெஸ்லிய மெதடிஸ்த மிஷனரியாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி காலம் சென்ற அருட்திரு வில்லியம் ஒல்ட் அடிகளாரை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு கேட் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நுழைவாயிலில் அமைந்துள்ள அண்னாரின் உருவச்சிலைக்கு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இ.கமலராஜாவினால் மலர் மாலை அணிவிக்கப்ட்டு அவர் ஆற்றிய சேவைகள் தொர்பாக கல்லூரி மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபரினால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் ,அன்னாருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் முன்னாள் பாடசாலை அதிபர் அருளானந்தம், மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் க. டேவிட் உட்பட பிரதி அதிபர்கள்,ஆசியரியர்கள் பெரும் திரளான மாணவர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment