காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது வருட புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான ஐ.எல்.அக்பர் தலைமையில் இடம்பெற்றது.

 இவ் வைபவத்தில்  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஐ.எம்.சுபைர், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அப்துல் கபூர்(மதனி), ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்தீக், காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அலியார்(பலாஹி) உட்பட உலமாக்கள, ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் பலரும் கலந்து கொண்டனர்.

 இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையான குடும்பத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 83 மாணவ மாணவிகளுக்கு   புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

Published by

One response to “காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு”

  1. Grad work u did thank you ……to hide our Sisters….

Leave a comment