குருநாகல்: பொசன் போயா தினத்தன்று போதையில் நடனமாடிய பிக்கு ஒருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்ற நீதவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவிட்டுள்ளார்.
குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் வைத்தே குறித்த பிக்கு குடித்து விட்டு நடனம் ஆடியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.
பிக்குவை நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் அவருடைய பௌத்த பிக்கு அடையாள அட்டையையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
போதையிலிருந்த பிக்கு தெலியாகொன்ன பிரதேசத்திலுள்ள சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கு முன்பாக சிறுவர்கள் கண்டுகளிக்க நடனமாடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. Jp
Leave a comment