“பொது பல சேனா” வின் கருத்துக்கு அடைக்கலநாதன் எம்.பி. கண்டனம்

adaikaகொழும்பு: மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புலிகளின் தலைவர் பிரபாகரனாக செயற்பட்டு வருகின்றார் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

‘நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினை தொடர்ந்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உரிமை தொடர்பாகவும், தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் குரல் கொடுத்து வந்தார்.

பொது பல சேனா என்ற அமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தது. தற்போது தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களின் செயற்பாடு ஆரம்பித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனும் நோக்குடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றார்.

தமிழ் மக்களுக்கு ஒரு பக்க பலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் செயற்பட்டு வருகின்றமையினை பொது பல சேன அமைப்பினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் எதிரொலியாக அரச தரப்பிலிருந்து தொடர்ச்சியாக மன்னார் ஆயருக்கு எதிரான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதன் ஓர் அங்கமாக பொது பல சேனா என்ற பேரினவாத அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

‘மன்னார் ஆயர் தமிழர் என்பதினால் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். மன்னார் ஆயருக்கு எதிராக குரல் கொடுக்க சிங்கள ஆயர்கள் முன்வர வேண்டும்’ என குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் எகோபித்த பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் ஆயர் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்.

ஆன்மீக பணி செய்கின்றவர்கள் தன் மக்கள் சார்பாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் குரல் கொடுக்க கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எனவே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் ஆயருக்கு எதிராக பொது பல சேன அமைப்பு முன்வைத்துள்ள கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

J-p

Published by

Leave a comment