பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி ஜம்மியதுல் உலமாவுக்கு 2 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷனின் பிரதம பணிப்பாளருமான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷனினூடாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அதன் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் வண்ணம் நிதிப்பங்களிப்பு செய்யும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு 08.00மணிக்கு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை காரியாலயத்தில் அதன் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜாமிய்யத்துல் பலாஹ் அறபுக்கல்லூரி அதிபர் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா ஆயுட்காலத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா (பஹ்ஜி), காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் சட்டத்தரனி ஏ.எல்.அப்துல் ஜவாத் பீ.ஏ, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக், முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளரும் பிரதியமைச்சரின் மத்திய கிழக்குக்கான ஆலோசகருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) மற்றும் உலமாக்கள், சம்மேளன பிரதிநிதிகள்,முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதியமைச்சரினால் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அதன் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் வண்ணம் 2 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டதுடன் பொது நிறுவனங்களுக்கு மேசை மின்விசிறிகளும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜாமிய்யத்துல் பலாஹ் அறபுக்கல்லூரி, காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு தலா 2 மின்விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டன.

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

Published by

Leave a comment