சந்திரிக்கா மல்வத்து பீடத்துக்கு விஜயம்

Chandrika9.img_assist_custom[1]கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று காலை மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இதனிடையே, மல்வத்து மகாநாயக்கர் மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கிடையே கலந்துரையாடலும் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் சந்திப்பின் நோக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அது தொடர்பாக கருத்து வெளியிட ஏற்ற இடம் இதுவல்லவென குறிப்பிட்டார்.

நீண்ட நாட்களாக மல்வத்து மகாநாயக்கரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள முடியாததன் காரணமாக, இன்றைய தினம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். J-p

Published by

Leave a comment