மட்டக்களப்பு: கோறளைப் பற்று தெற்கு எல்லையில் முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டில் 18 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட றெஜி கலாசார மண்டபம் நேற்று திங்கட்கிழமை (24.06.2013) திறந்து வைக்கப்பட்டது.
கோறளைப் பற்று தெற்கு பிரதேச சபைச் செயலாளர் சிகாப்தீன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கலாசார மண்டபத்தினைத் திறந்துவைத்தார்.
மேலும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள், கிரான் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
குறிப்பு:- காலாசார மண்டபத்திற்குப் பெயரிடப்பட்ட றெஜி என்பவர் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment