பேர்மிங்கம்: இங்கிலாந்து, பேர்மிங்கம் நகரில் ரட்லர் வீதியில் அமைந்திருக்கும் ஆயிஸா ஜூம்ஆ (வோல் சோல்) பள்ளிவாயலுக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 21) இரவு 10:45 மணியளவில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று காணப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் அவரசரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த குண்டு செயலிழக்கும் பிரிவினரும் பொலிஸாரும் பள்ளிவாயலின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் சுமார் 40 வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வேறு இடத்திற்கு தற்காலிகமாக நகருமாறு அவசர அறிவிப்பு செய்து மக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
பட்டாசு போல் பெட்ரோல் கலந்து வெடிபொருட்களுடன் காணப்பட்ட வெடி குண்டு என சந்தேகிக்கப்படும் குறித்த பொருள் உடனடியாக செலிழக்கப்பட்டு அகற்றப்பட்டது.
இரவு வேளையில் தூக்கத்திலிருந்த மக்கள் பதறியடித்து தங்களது குழந்தைகளுடன் வேறு இடத்துக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்ட நிலை காணப்பட்டது. மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேகத்தினடிப்படையில் இதுவரைக்கும் எவரும் கைது செய்யப்படவில்லை. பள்ளிவாயல் நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.
இக்குண்டை வைத்து ஓர் அசம்பாவிதத்தை தூண்ட மேற்கொண்ட இச் செயற்பாடுகளை அப்பகுதி மக்கள் வண்மையாகக் கண்டித்தனர்.
மஸ்ஜிதுல் ஆயிஷா- பள்ளிவாயலாகவும் இஸ்லாமிய நிலையமாகவும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
![walsall-4700954[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/walsall-47009541.jpg?w=615&h=409)

Leave a comment