சிறந்த பந்துவீச்சு, அபார களத்தடுப்பு: வெற்றிக் கிண்ணம் இந்தியாவுக்கு! அதிர்ந்தது இங்கிலாந்து!!

160349[1]-MJ

லண்டன்: நேற்று இரவு நிறைவடைந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கின்றது. இச்சாதனையில் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனி சிறப்புக்குரிய தலைவராக  இந்தியா புகழ்ந்திருக்கின்றது.

மோசமான காலநிலை, குளிர் காற்று, குறைவான வெப்பநிலையில் இந்தியா இங்கிலாந்தை போராடி தோற்கடித்திருக்கின்றது. 130 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இங்கிலாந்துக்குக் கிடைத்த போதிலும், இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சு, மற்றும் களத்தடுப்பில், இங்கிலாந்திடமிருந்த வெற்றி, நழுவி இந்தியாவுக்குச் சென்றது.

மோசமான காலநிலை காரணமாக தாமதமாக ஆரம்பமான இறுதிப்போட்டி, 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்து. பகல் ஆட்டமாக இருந்த போதிலும், பகல் இரவு ஆட்டமாக பின்னர் மாற்றப்பட்டது. இறுதியில் இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இங்கிலாந்து இருபது ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

மூன்று ‘ரண் அவுட்’கள் போட்டியை திசை திருப்பின. அதே போல் பிடிகள் எதையும் இந்திய வீரர்கள் தவறவிட வில்லை.

இவ்வெற்றியின் மூலம் 2007 இல் இருபது20 உலகக் கிண்ணம், 2011 இல் உலகக் கிண்ணம், தற்பொழுது சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய 3 சிரேஷ்ட கிண்ணங்களை வென்ற ஒரே ஒரு இந்திய அணித் தலைவராக டோனி புகழப்படுகிறார்.

இந்தியா அணிக்கும், அணித் தலைவர் டோனிக்குமான விசேட வரவேற்புகளுக்காக இந்தியா தயாராகிக்கொண்டிருக்கின்றது.

ஆட்ட நாயகனாக ஜடேஜாவும், தொடரின் நாயகனாக தவானும் தேர்வு செய்யப்பட்டனர்.

இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்வியை தற்பொழுது ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றன. நியூசிலாந்துடனான இருபது20 போட்டிகளைத் தொடர்ந்து வரலாற்று முக்கிய ஆஸஸ் கிண்ணம் இங்கிலாந்தில் ஜூலை மாதம் தொடக்கம் ஆரம்பமாகிறது.

எல்லோராலும் கூறப்பட்ட இதுதான் இறுதி ஐ.சி.சி தொடர் என்ற கருத்துக்கு, கிரிக்கட் வல்லுனர்கள் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சம்பந்தமான ஆலோசனைகளையும், இத்தொடர்பற்றிய மேலதிக கருத்துக்களையும் ஐ.சி.சி உயர்மட்டக்குழு விரைவில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவை வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி ஒன்றில் மீண்டும் ஐ.சி.சி சம்பியன்ஸ் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

160339[1]

India-Champions-Trophy-celeb_2963047[1]

160349[1]

160341[1]

Published by

Leave a comment