கிழக்கு மாகாணம்: தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவரும், முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேருமான அஸாத் சாலி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து அவர் சிறையில் இருந்த போது அவருக்காக நோன்பு நோற்று, துஆ செய்து, கடைகளை அடைத்து அவரின் விடுதலைக்காக பாடுப்பட்ட கிழக்கு மக்களுக்கு நன்றி செலுத்த ஏதிர்வரும் 28ஆம் திகதி அம்பாறை – நித்தவூர் பிரதேசத்திற்கும், 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஒட்டமாவடி பிரதேசத்திற்கும், 30ஆம் திருகோணாமலை – கிண்னியா பிரதேசத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக தேசிய ஜக்கிய முன்னனியின் தவிசாளர் ஏ. எல். ஏ. கனி ஹாஜியார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் விஜயத்தில் (நுஹா) தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவரோடு இன்னும் பல அரசியல் பிரமுகர்களும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a comment