கல்முனை: நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை குப்பையில் போட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டின் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளடக்காமை பாரிய தவறாகும்.
அவ்வாறான தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியின் பிரதிநிதிகளை உள்ளடக்காமையின் மூலம் அரசாங்கம் பாரிய அநீதி இழைத்துள்ளது. சிறிய கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள அரசாங்கம் பிரதான முஸ்லிம் கட்சியின் பிரதிநிதிகளை உள்ளடக்கத் தவறியுள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளினால் சர்வதேசத்தின் நம்பிக்கை மேலும் வழுவிழக்கும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் தேர்தலில் போட்டியிட ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் 18ம் திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தது.
அவ்வாறு ஆதரவளித்த கட்சிக்கு அரசாங்கம் காட்டும் நன்றி விசுவாசம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது என ஹக்கீம் தெரிவித்துள்ளார். கல்முனையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இனைக் குறிப்பிட்டுள்ளார். TW
Leave a comment