அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் பதவிநீக்கம்!

மெல்போர்ன்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் பதவிநீக்கப்படுகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு இன்னும் 16 நாட்களே உள்ளநிலையில் ஆஸ்திரேலிய இந்த முடிவை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி கடந்த பல ஆட்டங்களில் சோபிக்கத் தவறியுள்ளமையாலும் அணி நிர்வாகத்துக்குள் நிலவும் ஒழுக்க- ரீதியான சர்ச்சைகளாலும் மிக்கி ஆத்தர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இன்று நடக்கவுள்ள ஊடக சந்திப்பின்போது அணியின் பயிற்சிக் கட்டமைப்பு தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படும் என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கரான மிக்கி ஆத்தர் தான் அவுஸ்திரேலியாவின் முதலாவது வெளிநாட்டைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர். டிம் நீல்சனுக்குப் பின்னர் 2011-ம் ஆண்டில் அவர் பொறுப்புக்கு வந்தார்.

ஜூலை 10-ம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக இரண்டு அணிகளும் இரண்டு 4-நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. மிக்கி ஆத்தரின் பயிற்சியின் கீழ், அவுஸ்திரேலியா மொத்தமாக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 இல் வென்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment