மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் ‘ஈஸ்ட் லகூன்’ நட்சத்திர ஹோட்டல் – அமைச்சர் பசில் ராஜபக்ஷ திறந்து வைப்பு

Yourkattankudy
Yourkattankudy

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் எங்கும் இல்லாதவாறு மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் – மட்டக்களப்பு சின்ன உப்போடை லேக் வீதியில் 35 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘ஈஸ்ட் லகூன்’ எனும் நட்சத்திர ஹோட்டல் இன்று சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாண சுற்றுலா அமைச்சர் ஹாபிஸ் நஸீர், முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் அருன் தம்பிமுத்து, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment