எமது ஆயிஷா பவுண்டேசன் அமைப்பினால் வழங்கப்படவுள்ள மேற்படி புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் உதவிபெற விரும்பும் கீழ்க்காணும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01. 2012ம் ஆண்டில் க.பொ.த. (சா.த) பரீட்சைக்கு தோற்றியவராக இருத்தல்
02. 2015ம் ஆண்டில் க.பொ.த. (உ.த) பரீட்சைக்கு தோற்றுபவராக இருத்தல்
03. காத்தான்குடியிலும் அதன் அயல் பிரதேசங்களிலுமுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பவராக இருத்தல்
04. க.பொ.த. (சா.த) பரீட்சையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், போன்ற பாடங்களில் குறைந்தது ‘C’ தர சித்தியைப் பெற்றிருத்தல்
05. அரச புலமைப் பரிசில், சிப்தொறு, பைத்துல்மால், செரண்டிப், போன்ற வேறு புலமைப் பரிசில்கள் பெறாதவராக இருத்தல்
06. சமுர்த்தி உதவியினைப் பெறுபவராக இருத்தல்
மேலுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், கீழே தரப்படும் மாதிரி விண்ணப்பத்தைத் தயாரித்து அதனைப் பூர்த்திசெய்து விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 05.07.2013ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு CMM. சமீம், செயலாளர், ஆயிஷா பவுண்டேசன், 22B, பதுரியா வீதி, புதிய காத்தான்குடி-01. எனும் முகவரிக்கு, அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
செயலாளர்
குறிப்பு:
இவ்விளம்பரம் ஆயிஷா பவுண்டேசனின் ஊடகப்பிரிவிற்குரியதாகும், இந்நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு ஊடகங்கள் இதனை வெளியிடுவதைத் தவிர்ந்து கொள்ளவும்.

Leave a comment