பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை கையாள 2013-தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட வைபவம் மட்டக்களப்பில்

– பழுளுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????மட்டக்களப்பு: கலாசார அலுவலகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட வைபவம் நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன, மாவட்ட செயலக கலாசார அபவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன்; உட்பட பிரதேச செயலாளர்கள்,14பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கலாசார உத்தியோகத்தர்கள்,  அதிகாரிகள்,  திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ‘பாரம்பரியம் ஒரு நோக்கு’ எனும் தலைப்பில் முன்னாள் மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் செல்வி த.தங்கேஸ்வரி, ‘மட்டக்களப்பின்-பாரம்பரிய உணவுப்பழக்கங்கள்’ எனும் தலப்பில் மட்டு அரசினர் ஆசிரியர் கலாசாலை சிரேஷ்ட விரிவுரையாளர் வி.ரி.திருமதி ராதா ஞானரத்தினம், ‘வாழ்வும் உணவுப் பாரம்பரியமும்’ எனும் தலைப்பில் எழுத்தாளரும், முன்னால் மேலதிக அரசாங்க அதிபருமான  ஜுனைதா சரீப் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

 இதன்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள்,நாடகம்; ஆகியன அரங்கேற்றப்பட்டதுடன் பாரம்பரிய உணவுகள் அடங்கலான பகல் போசனமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

??????????????????????????????? ???????????????????????????????

Published by

Leave a comment