கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நடமாடும் சேவை ஆரம்பம்

123– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன் பிடி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் நடமாடும் சேவையும் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களுக்கு அமைச்சின் அதிகாரிகளுடன்; விஜயம் செய்து அங்கு நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிவதுடன் உடன் நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் இவ் வேலைத்திட்டம் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் நேற்று (20.06.2013) இடம் பெற்றது.

 இதில் ரிதிதென்ன, காவத்தமுனை, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் உள்ள அரச கால்நடை உற்பத்தி சுகாதார திளைக்களக் காரியாலயங்களுக்கும், வாழைச்சேனை தச்சுத் தொழில் பயிற்சிப் பாடசாலைக்கும் சென்று அங்குள்ள குறைபாடுகளைக் கேட்றிந்து அதற்கான தீர்வுகளையும் அதிகாரிகளுடன் பேசி பெற்றுக் கொடுத்ததுடன் கால் நடை வளர்ப்பாளர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்து அதற்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி அமைச்சு, விவசாய அபிவிருத்தி அமைச்சு, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீன் பிடி அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

123

067

076

Published by

Leave a comment