காத்தான்குடி: காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றான பூநொச்சிமுனை கிராமத்தில் இக்றஃ வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செயலமர்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலய மண்டபத்தில் பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலய அதிபர் றஸூல் ஜேபி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விரிவுரையாளராக தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம்.ஐயூப் கலந்து கொண்டு ‘கல்வியின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் விசேட விரிவுரை நிகழ்த்தினார்.
குறித்த இச்செயலமர்வில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் உறுப்பினர்களான டொக்டர் எஸ்.டி.எம்.மாஹிர், தென் கிழக்குப் பழ்கலைக்கழக விரிவுரையாளர் சி.எம்.எம்.மன்சூர், ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் உறுப்பினரும் பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியருமான ஜூனைட்,பாடசாலை ஆசிரியர்கள்,ஆண் பெண்கள் அடங்கலாக மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த பிரதேசத்தில் மாணவர்கள் கல்வி யில் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களை மாணவர்களின் பெற்றோர்களிடம் கேட்டறியப்பட்டதுடன் அவர்களது குறைநிறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எம்மால் முடியுமான அளவு நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம் என தெரிவித்தனர்.
குறித்த ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பு காத்தான்குடிப் பிரதேசத்தை சூழவுள்ள பிரதேசங்களில் மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளமைகை;கான காரணத்தை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வினை வழங்குவது மட்டுமல்லாமல் காலத்திற்கேற்ப சமூகத்திற்கு பல்வேறு விழ்ப்புணர்வு செயற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment