– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் ஏற்பாட்டில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோருக்கான விசேட செயலமர்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 04.00மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் சிறிதரன் ‘புலமைப் பரிசில் மாணவர்களுடன் பெற்றோர்கள்’ எனும் தலைப்பில் விசேட விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
இச் செயலமர்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் டி.வசந்தராஜா,இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் செயலாளரும் காத்தான்குடி சமுர்த்தி முகாமையாளருமான சுல்மி,இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் இணைப்பாளர் எம்.ஐ.எம்.சலீம், ,இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் உறுப்பினர் அன்வர்,முன்னாள் கிராம சேவகர் உமர்லெப்பை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டதுடன் குறித்த செயலமர்விற்கு காத்தான்குடி இந்தியன் கோணரும்,தூய பசும்பால் விநியோக ஸ்தாபனமும் இணைந்து அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment