காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, கல்வியமைச்சின் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் எஸ். காலநிதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை பிரதித் தவிசாளர் ஜெஸீம், காத்தான்குடிப் பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி எம்.எஸ். சுபைர், காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை ஆசிரியார்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2013 வருடாந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றதுடன் குறித்த பாடசாலை ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிருப்பதால் மஹிந்தோதய ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் நட்டி வைக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் குறித்த பாடசாலையில் இதுவரை காலமும் சிறப்பாக கடமையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a comment