மாணவர்கள் கல்வித்துறையில் மேம்பட்டு விளங்க பாடசாலை ஆசிரியர்களின் முழுநேர பங்களிப்பு அவசியமாகும்- அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார்

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஒரு பாடசாலை கல்வித்துறையில் மேம்பட்டு விளங்க வேண்டுமானால் அங்கு பாடசாலை ஆசிரியர்களின் முழுநேர பங்களிப்பு அவசியமாகும் என காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலய அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தெரிவித்தார்.

காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா இன்று வியாழக்கிழமை காலை காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஒரு பாடசாலை கல்வி ரீதியாக முன்னேறுவதற்கும் மாணவர்கள் கல்வித்துறையில் சிறப்புற்று விளங்குவதற்கும் குறித்த பாடசாலையின் ஆசிரியர்களது முழுநேர பங்களிப்பு அவசியமானதாகும்.

பாடசாலை இயங்கும் நேரங்களில் ஆசிரியர்களின் நடவடிக்கை சுறுசறுப்பானதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் அமைந்து விடும் பட்சத்தில் பாடசாலையை பாரிய முன்னேற்றத்தின் பால் இட்டுக் கொண்டு செல்ல முடியும்.

காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலம் காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திலேயே ஒரு முன்னோடிப் பாடசாலையாகும்.இப்பாடசாலையில் அதிபர்களாக ஆசிரியர்களாக கடமையாற்றிய எல்லோரும் அர்ப்பணிப்புடன் அவரவரது பங்களிப்புக்களை செய்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவர்கள் சில பௌதீக வளங்கள் இல்லாத போதும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.ஒழுங்கான விளையாட்டு மைதமானம் இல்லாமல் பல்வேறு தேசிய மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளிலும் எமது மாணவர்கள் பங்கு பற்றியுள்ளனர்.

ஆய்வு கூடம் இல்லாமல் சிறந்த பெறுபேறுகளையும் எடுத்துள்ளனர்.பூரண வளமிக்க வாசிகசாலை இல்லாத போதும் தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனகளை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

இப்படியான ஒரு பாடசாலைக்கு மேலும் அதற்கு தேவையான பௌதீக வளங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்பட்டால் பாடசாலை சிறந்த அடைவ மட்டத்தை எட்டுவதோடு மாணவர்களின் ஏனைய செயற்பாடுகளும் விருத்தியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment