கல்முனையில் மட்டுமல்ல காத்தான்குடியிலும் கால்பதிப்போம்: பொதுபல சேனா சவால்

bothuபதுளை: கல்முனைக்கு மட்டுமல்ல காத்தான்குடிக்கும் விரைவில் சென்று பொதுக் கூட்டங்களை நடத்துவோம் என  பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார்.எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி கல்முனையில் பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் கல்முனைக்குச் செல்லவிருந்தோம். ஆனால், எங்களது இராணுவ அதிகாரிகள், தற்போதைக்கு அங்கு வர வேண்டாம் என்று மண்டியிட்டு வேண்டிக் கொண்டார்கள். அவர்களை அசௌகரியத்தில் மாட்டிவிடக் கூடாது என்ற காரணத்தால் நாங்கள் கல்முனைக்கு செல்வதை சற்று காலம் தாழ்த்தியுள்ளோம்.ஆனால் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி தீகவாபிக்குச் சென்று அடுத்த நாள் 07ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கல்முனை நகரில் பொதுபல சேனா பொதுக் கூட்டம் நடைபெறும் என்பதை இங்கு அறிவித்துக் கொள்கிறோம். அத்துடன் நாங்கள் காத்தான்குடிக்கும் விரைவில் செல்லவுள்ளோம். முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்போ, பிள்ளையானோ தேவையில்லை!
அண்மையில் நாங்கள் அம்பாறைக்குச் சென்றோம். அங்கு வந்த கல்முனை தமிழ் சகோதரர்கள் எங்களை கல்முனை பகுதிக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.கல்முனையில் வாழும் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அப்பிரதேசத்திலிருந்து நாளுக்குநாள் துரத்தப்படுவதாகவும் முஸ்லிம்களின் அடிப்பட வாத செயற்பாடுகளிளிருந்து அந்த தமிழ் சகோதரர்களை பாதுகாத்துக் கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்போ, பிள்ளையானோ, தமிழ் அரசியல்வாதிகளோ தேவையில்லை.

பொதுபல சேனா மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. ஆகவே, நீங்கள் கல்முனை பகுதிக்கு வாருங்கள். உங்களுக்கு காரியாலயங்களை நடத்த நாங்கள் எங்களது வீடு வாசல்களை தருகின்றோம் என்று கூறி எங்களை அழைக்கின்றார்கள்” எனவும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

Published by

One response to “கல்முனையில் மட்டுமல்ல காத்தான்குடியிலும் கால்பதிப்போம்: பொதுபல சேனா சவால்”

  1. mudiyumna vanka. abdullah pailwan nalla utharanam. mandaiyodai thedevendi varum. yar thadutthalum sari

Leave a reply to dudu Cancel reply