இன்றைய போட்டியில் மைதானத்தில் ஊடறுத்த புலிகளின் ஆதரவாளர்கள்

photo (2)-MJ

லண்டன்: தற்பொழுது வேல்ஸ் கார்டிப் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையில் இடம்பெறும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை இடையூறு செய்தனர்.

கைகளில் இலங்கை எதிர்ப்பு பதாதைகளையும், விடுதலைப் புலிகளின் கொடிகளையும் ஏந்திக்கொண்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கை வீரர்களை நோக்கி இவ்விருவரும் விரைந்து வந்தனர்.

இவ்வாறு மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை இடையூறு செய்த இருவரும் மைதான பாதுகாப்பு ஊழியர்களால் தடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

தற்பொழுது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார்டிப் மைதானத்துக்கு வெளியிலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் இலங்கை எதிர்ப்பு சுலோகங்களைத் தாங்கியவாறு நின்றுகொண்டிருக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை-அவுஸ்திலேலியா அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர் மைதானத்தின் வெளியில் இலங்கை கிரிக்கட் ஆதரவாளர்கள் சிலருக்கும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

photo (2)

photo (1)

Published by

Leave a comment