மாத்தறை: மாத்தறை கல்வி வலயத்தில் வாழும் போக்குவரத்து கஸ்டங்கள் இருக்கும் பிரதேசங்களிலருந்த பாடசாலைக்கு செல்லும் மாணவ மாணவிகளின் நலன்கருதி துவிச்சக்கரவண்டிகள் பெற்றுக் கொடுக்கும் வைபவம் அண்மையில் மாத்தறை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை தனியார் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தனியார் போக்குவரத்து ஆணைக்குழுவினால் செயல்படும் ‘சிசு செரிய’ வேலைத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட இன் நிகழ்வானது இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் தணியார் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஹான் குணவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் மாணவ மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதைப் படத்தின் காணலாம்.



Leave a comment