திருமணமில்லாமலேயே 42 வது வயதில் ராகுல் காந்தி!

rahul-OIT

டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 42வது பிறந்த நாளை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ராஜீவ் காந்தி – சோனியா காந்தி தம்பதியின் மகனான ராகுல் காந்தி, படிப்படியாக கட்சியில் உயர் பதவிகளை அடைந்து வருகிறார்.

ஆரம்பத்தில் சாதாரண எம்.பியாக இருந்த அவர் தற்போது துணைத் தலைவராக உயர்ந்துள்ளார். அடுத்து பிரதமர் பதவிதான் என்று அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தனது 42வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி இதுவரை திருமணம் குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார்.

தனது தந்தை ராஜீவ் காந்தியைப் போலவே வெளிநாட்டுப் பெண் ஒருவரைக் காதலித்து வந்தார் ராகுல் காந்தியும். ஆனால் அந்தக் காதல் என்னவானது என்பதுதான் இதுவரை தெரியவில்லை.

திருமணம் குறித்து இதுவரை வெளிப்படையாக ஒருமுறை கூட பேசியதில்லை ராகுல் காந்தி. திருமணம் செய்யும் எண்ணம் உண்டா என்பது குறித்தும் மூச்சு பேச்சு காட்டாமல் இருக்கிறார்

ராகுல் காந்திக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்இ பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். டிவிட்டர் மூலமும் பல்வேறு தலைவர்கள் ராகுலை வாழ்த்தியுள்ளனர்.

rahul

Published by

Leave a comment