காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலயத்திற்கு 65,000 ரூபா பெறுமதியான கதிரை,மேசைகள் வழங்கி வைப்பு

kattankudy (2)– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய மாணவிகளின் அத்தியவசிய தேவைப்பாடுகளில் மிக முக்கியமான  தளபாட  பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக பாடசாலை பொற்றோர் சமூக அங்கத்தவர்களின் பாரிய முயற்சியில் சுமார் 65,000 ரூபா  பெறுமதியான கதிரை,மேசைகள்  அண்மையில் காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய உப அதிபர் ஏ.எல்.எம். யஸீர் அரபாத்திடம் கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் யுவர் காத்தான்குடி இணையத்தள செய்தியாளருமான ஏ.எல்.டீ. பைறூஸினால் 30 கதிரை, மேசைகள் வித்தியாலய உப அதிபர் ஏ.எல்.எம். யஸீர் அரபாத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் கே.எல். றஹீம் ஜேபி, காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய ஆசிரியர்களான ஏ.எல்.எம். சப்ரி, எம்.எஸ்.எம்.அனீஸ, காத்தான்குடி மட்-அல்-அமீன் மஹா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் யுவர் காத்தான்குடி இணையத்தள செய்தியாளருமான ஏ.எல்.டீ.பைறூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

kattankudy (4)

kattankudy (2)

Published by

Leave a comment